| ADDED : டிச 06, 2025 06:30 AM
கடலுார்: கடலுார் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13 ம் தேதி மங்களூரில் நடக்கிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடலுார் மாவட்டத்தை சார்ந்த 8, 10, பிளஸ் 2 வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப்பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in, ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை அறிய கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142-290039), வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.