உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருத்தாசலம் : மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சேர்மன் சங்கவி முருகதாஸ், துணை சேர்மன் ராணி தண்டபாணி, மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுக்கா பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு 38 லட்சத்து 94 ஆயிரத்து 556 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, நகர துணை செயலாளர் நம்பிராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், வழக்கறிஞர் அணி அருள்குமார், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். தாசில்தார் உதயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை