உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மலையனுாரில் மக்கள் குறை கேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், மங்களூர்பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, சிவக்குமார், மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி குமணன் வரவேற்றார். அமைச்சர் கணேசன் மக்களின் குறைகளை கேட்டறிந்து, பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், அயலக அணி அமைப்பாளர் சேதுராமன், நிர்வாகிகள் சன் அன்பு, பாண்டுரங்கன், திருவள்ளுவன், சேகர், ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், ராமு உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மங்களூர்தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமையில் மேள தாளங்களுடன், அமைச்சர் கணேசனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், அமைச்சர் கணேசன் பேசுகையில், 'மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், திட்டக்குடி தொகுதியில் மட்டும் 55 ஆயிரம் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. விடுபட்ட குடும்பங்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ