உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் மற்றும் திட்டக்குடியில் நடந்த த.மா.கா., தலைவர் வாசன் பிறந்த நாள் விழாவில் மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவிற்கு வட்டார தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் குணசேகரன், வட்டார தலைவர் துரைசாமி, மாவட்ட செயலாளர் ரமேஷ், கீரை குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் பங்கேற்று, 61 பெண்களுக்கு சேலை, முதியவர்களுக்கு போர்வை மற்றும் தாய்வீடு முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்கினார். இதில், வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், செல்வம், கார்த்தி, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜான்சிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்டக்குடியில் நடந்த விழாவிற்கு நகர தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட பொருளாளர் வசந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், ஸ்ரீதர், இளையகுமரன், உமாவேல், இளைஞரணி தர்மா, வட்டார தவைவர்கள் குணேசேரகன், இளஞ்செழியன், பூமாலை, அம்மா அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை