உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொதுமக்கள் மனுக்கள் எடைபோட்டு விற்பனையா

பொதுமக்கள் மனுக்கள் எடைபோட்டு விற்பனையா

அரசு வருவாய்த்துறை மூலம் ஆதரவற்றோர், விதவை, முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள், ஆதார், ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா மாற்றம் என, பல வகைகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் மனுக்கள் வரும். அவை மீது தீர்வு காணப்பட்டு, அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி., என மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.இந்த புகார் மனுக்கள் அனைத்தும் தாலுகா அலுவலகத்தில் ஒரு அறையில் பராமரிக்கப்பட்டு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் எரிக்கப்படுவது வழக்கம். புகார் மனுக்களை அவ்வாறு பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மாசி மகத்துக்கு பெயர்போன தாலுகா அலுவலகத்தில், குவிந்து கிடந்த மனுக்கள் இரண்டு லாரிகளில் எடைக்குப் போட அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.குறிப்பிட்ட புரோக்கர்கள் மூலம் ரகசியமாக நடந்த இந்த சம்பவத்தை மோப்பம் பிடித்த அதே அலுவலக கோஷ்டி ஒன்று, கலெக்டர் முதல் வருவாய்த்துறை செயலாளர் வரை புகார் தெரிவிப்போம் என போர்க்கொடி துாக்கியுள்ளனர். அந்த தாசில்தார் பணி மாறுதலாகி சென்றாலும், புதிதாக வந்த தாசில்தாருக்கு தலைவலி ரெடியாகி விட்டது.வடிவேலுவின் 23ம் புலிகேசி சினிமாவில், 'துாது வந்த புறாவை வறுத்தா தின்பது' என்ற நகைச்சுவை காட்சிபோல, பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை எடைக்கா போடுவது என, சிலர் கிண்டலடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்