உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குவாரி குத்தகை உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு

குவாரி குத்தகை உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார் : புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், குவாரி குத்தகை உரிமம் கோருவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959ன் படி சாதாரண கற்கள், மண், கிராவல் மற்றும் கிரானைட் போன்ற சிறு வகை கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள், செங்கல்சூளை பதிவு சான்று மற்றும் இதர சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதி முதல் மின்னனு முறையில் இணையதள வாயிலாக மட்டுமே பெறப்படும். சிறு கனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோருவோர் www.mimas.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை