உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நேஷனல் கல்லுாரியில் வினாடி வினா போட்டி

 நேஷனல் கல்லுாரியில் வினாடி வினா போட்டி

நெய்வேலி: நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் தேர்விற்கான வினாடி வினா போட்டி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தாஙமாதரன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் பரிமளா வரவேற்றார். மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன், கல்லுாரி முதல்வர் ஆஷா ரோசலின் வாழ்த்தி பேசினர். அரசு பள்ளி, நிதி உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று நிலைகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் வரும் 30ம் தேதி நெய்வேலியில் நடக்கும் மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். நிகழ்ச்சியில், துணைத் தலைவர்கள் பூர்வ சந்திரன், கோபிநாத், அனுப்பிரியா, பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை