உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குடியிருப்புகளில் மழைநீர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 குடியிருப்புகளில் மழைநீர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் பகுதிகளில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சிதம்பரம் நகர வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரம் அடுத்த உசுப்பூர் இந்திரா நகர், மகாவீர் நகர் ஏ-பிளாக் பகுதிகள், சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை பகுதியை ஒட்டிய லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர், சாரதாராம் நகர், எம்.ஆர்.வி., நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலை உடைப்பு சிதம்பரம் அடுத்த லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட மணலுார் பகுதியில், சிதம்பரம்-நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் பணிகளுக்காக, இணைப்பு சாலை அமைக்கப்பட்டதால், தையாக்குப்பம், மணலுார், லால்புரம் ஊராட்சி பகுதிகளில், மழைநீர் வடியாமல், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. அதனை தொடர்ந்து, உடனடியாக, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை உடைத்து, மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை, சிவகாமியம்மன் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. புவனகிரி புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் சாலையோர குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியது. முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சுமார், 110 ஏக்கர் அளவில் விவசாயிகள் தங்கள் வயல்களில் மணிலா சாகுபடி செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இப்பகுதி வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்ததால் மணிலா சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ