உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளிகளில் குடியரசு தின விழா

பள்ளிகளில் குடியரசு தின விழா

கடலுார் : கடலுார் எஸ்.எஸ்.ஆர்., நகர் லட்சுமி சோரடியா பள்ளியிலும், பாபுராவ் தெரு ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, கவிதைப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இரு பள்ளிகளிலும் பட்டாசு வெடிக்காத 37 மாணவர்களுக்கு ஸ்ரீஜெயின் சங்கம் சார்பில், பாஸ்மல் ஜெயின், விரேந்திரகுமார் உச்சாட் ஆகியோர் பரிசு வழங்கினர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா பேசினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா செய்திருந்தார்.முள்ளோடையில் உள்ள ஹயக்கிரிவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மற்றும் டி.வி.ஆர்.கல்வியியல் கல்லுாரி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றினார். பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் லெரு அலெக்சாண்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பரங்கிப்பேட்டை

பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்து சுகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

சிதம்பரம்

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் நடந்த விழாவிற்கு, வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் குமார், எஜூகேஷனல் டிரஸ்ட் உறுப்பினர் லியோனா அருண் தலைமை தாங்கினர். முதல்வர் ரூபியாள் ராணி முன்னிலை வகித்தார். என்.சி.சி., அலுவலர் வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தேசிய கொடி ஏற்றினார். டாக்டர் லதா வாசுதேவன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், வழக்கறிஞர் ராமதாஸ் வாழ்த்திப் பேசினர்.

பண்ருட்டி

ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி முதல்வர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் கனகராஜன் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

வடலுார்

குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். கல்வி ஆலோசகர்கள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன், இயக்குனர்கள் வேலு, திராவிட அரசு, பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், குமார் உட்பட பலர் பங்கேற்றனர். .பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் அபிராமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை