உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் ராஜகோபுரம் புனரமைக்க கோரிக்கை

கோவில் ராஜகோபுரம் புனரமைக்க கோரிக்கை

கடலுார் : சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் ராஜகோபுரம் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என, திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரசனை சந்தித்து, சங்க பொதுச்செயலாளர் ராஜா, வட்டத் தலைவர் கலியபெருமாள் உள்ளிட்டோர் அளித்த மனு:சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் கோபுரத்தின் மீது இருந்த திருநீலகண்ட நாயனார் ரத்தின சேவை கற்சிலை காணாமல் போனதை விரைந்து கண்டுப்பிடிக்க வேண்டும். கோவில் முன்புறம் உள்ள ராஜகோபுரத்தை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். கோவில் திருக்குளத்தை சுத்தம் செய்து கிழக்கு கரை சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !