உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

 உடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர்: நல்லூர் அருகே அரசு பள்ளியையொட்டி உடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. நல்லூர் அடுத்த நகர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, சேப்பாக்கம்- நல்லுார் சாலையையொட்டி, அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அதில், 100க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், அரசு பள்ளியையொட்டிய பகுதியிலுள்ள பாலம் உடைந்துள்ளது. இதனால், அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள், பைக்கில் செல்பவர்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விழும் அபாயம் உள்ளது. அதனால், சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ