உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்டர் மீடியன் அமைக்க எதிர்ப்பு கடலுார் அருகே சாலை மறியல்

சென்டர் மீடியன் அமைக்க எதிர்ப்பு கடலுார் அருகே சாலை மறியல்

கடலுார்: கடலுாரில் சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, பெரியகங்கணாங்குப்பத்தில் (நாணமேடு செல்லும் சாலை அருகே) நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.சென்டர் மீடியன் அமைப்பதால் நீண்ட துாரம் சென்று திரும்பி வர வேண்டியுள்ளது. எனவே, வாகனங்கள் சென்று வர வசதியாக இடைவெளி விட்டு சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி நாணமேடு, உச்சிமேடு, சுபா உப்பலவாடி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள், நேற்று மாலை 4:30 மணிக்கு பெரியகங்கணாங்குப்பத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களில் சிலர் சென்டர் மீடியன் அமைக்கும் பணிக்காக கட்டப்பட்டிருந்த கம்பிகளை சாலையின் நடுவே இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தெடார்ந்து, மறியல் 4:45 மணிக்கு கைவிடப்பட்டது. மறியலால் கடலுார்-புதுச்சேரி சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி