மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
6 hour(s) ago
நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
6 hour(s) ago
கடலுார், புதுச்சேரியில் 2ம் எண் புயல் கூண்டு
23 hour(s) ago
தொழிலாளியிடம் வழிப்பறி வாலிபர் கைது
28-Oct-2025
குறைதீர்வு முகாம்
28-Oct-2025
பண்ருட்டி: பண்ருட்டியில், பள்ளி மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.பண்ருட்டி அடுத்த திருவதிகை ராசாப்பாளையத்தை சர்ந்த மாணவர், பண்ருட்டி அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 18ம் ததி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது, நரிமடு, வளையகாரக்குப்பம் பகுதியை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, முன்விரோதத்தில், மாணவரை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து பண்ருட்டி போலீசார், தினேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிந்து ேதடி வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் 2:15 மணியளவில் பண்ருட்டி பஸ்நிலையம் முன்பு மாணவர் உறவினர்கள் திரண்டு, மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.மாணவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, 2:45 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
6 hour(s) ago
6 hour(s) ago
23 hour(s) ago
28-Oct-2025
28-Oct-2025