உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாலையோர வியாபாரிகள் மழையால் பாதிப்பு

 சாலையோர வியாபாரிகள் மழையால் பாதிப்பு

கடலுார்: மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் சாலையோர வியாபாரிகள் கவலை யடைந்தனர். கடலுார் லாரன்ஸ்ரோட்டில் ஏராளமான சிறு, குறு வியாபாரிகள் தற்காலிகமாக கடைகள் அமைத்து துணிகள், விற்பனை செய்கின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள் சாலையோர கடைகளில், தங்களுக்கு பிடித்த துணிகளை குறைந்த விலையில் வாங்குவர். இந்நிலையில் புயல் காரணமாக பெய்த மழையால் கடலுாரில் மக்கள் வீடுகளில் முடங்கினர். லாரன்ஸ்ரோட்டில் சாலையோர வியாபாரிகள் மழையால் துணிக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகளை திறக்காமல் வீடுகளில் முடங்கினர். இதனால், வியாபாரிகள் வருமானத்தை இழந்து கவலையடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை