உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

கடலுார்: காட்டுமன்னார்கோவில் ரவுடியை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.குமராட்சி போலீசார் கடந்த மாதம் 7ம் தேதி, சிறகிழந்தநல்லுார் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு, காட்டுமன்னார்கோவில், கத்திரிமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக், 33; என்பவர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திக்கை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது குமராட்சி போலீசில் ரவுடி பதிவேடு பராமரிக்கப்படுகிறது. மேலும், இதே போலீசில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, திருட்டு, மணல் திருட்டு என 12 வழக்குகள், அண்ணாமலை நகர் போலீசில் 4, சிதம்பரம் தாலுகாவில் 2 என மொத்தம் 18 வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ராஜாராம், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவுபடி, மத்திய சிறையில் கார்த்திக்கிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை