உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 1.06 கோடி திட்டப் பணிகள் கடலுாரில் எம்.எல்.ஏ., அடிக்கல்

ரூ. 1.06 கோடி திட்டப் பணிகள் கடலுாரில் எம்.எல்.ஏ., அடிக்கல்

கடலுார், : பாதிரிக்குப்பம் மற்றும் மருதாடு ஊராட்சியில் 1 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கடலுார் ஊராட்சி ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் 68 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், மருதாடு ஊராட்சியில் 38 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் துவக்க விழா நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராகிம், பார்த்திபன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, ஊராட்சித் தலைவர்கள் பாதிரிக்குப்பம் சரவணன், மருதாடு நாராயணன் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர்கள் முத்துக்குமாரசாமி, மனோகர், கனகராஜ், தமிழரசி பிரகாஷ், தொழிலதிபர் சக்திவேல், சன் பிரைட் பிரகாஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர், மாதர் நல தொண்டு நிறுவன நிர்வாகிகள் ராஜேந்திரன், ஸ்ரீமதி ராஜேந்திரன், அரிமா ராஜா, ஊராட்சி செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை