உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரபல கோவிலில் சுகாதாரம் கேள்விக்குறி...

பிரபல கோவிலில் சுகாதாரம் கேள்விக்குறி...

விருத்தாசலத்தில் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடக்கிறது.இந்நிலையில், கோவிலின் உட்புறம் இடதுபுறத்தில் பக்தர்கள் நலன் கருதி ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக கழிவறைகள், குளியலறைகள் உள்ளன. ஆனால், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படாமல், ஆங்காங்கே கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.இதனருகே அன்னதானக் கூடம் இருப்பதால், ஏழை எளிய மக்கள் உணவருந்த முடியாமல் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆல மரத்தை சுற்றி, ஆழத்து விநாயகர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் துர்நாற்றம் தாங்காமல், முகம் சுழிக்கும் அவலம் தொடர்கிறது.எனவே, கோவில் வளாகத்தில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை