உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடையில் புடவை திருட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு

கடையில் புடவை திருட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஜவுளிகடையில் புடவை திருடிய இரண்டு பெண்களை கடையின் உரிமையாளர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மங்கலம்பேட்டை கடைவீதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் இருந்த 5 ஆயிரம் மதிப்பிலான புடவைகள் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி காணாமல் போனது.அதைத்தொடர்ந்து, கடையில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை கடையின் உரிமையாளர் ஆய்வு செய்தார். அப்போது, இரண்டு பெண்கள் தங்களது உடலில் மறைத்து 8க்கும் மேற்பட்ட புடவைகளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்த கடையின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் ஏதும் அளிக்கவில்லை.இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த ஜவுளிகடைக்கு, புடவை எடுப்பது போல், இரண்டு பெண்களும் வந்துள்ளனர். அப்போது, சுதாரித்துக் கொண்ட கடையின் உரிமையாளர், அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து, மங்கலம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார்.விசாரணையில், இருவரும் கடலுாரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. ஜவுளி கடை உரிமையாளர் புகார் ஏதும் அளிக்காததால், அந்த இரண்டு பெண்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை