உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

சிதம்பரம்: அண்ணாமலை நகரில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் குமராட்சி வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், மாவட்ட மருத்துவ கல்லுாரியை பார்வையிட்டனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி ஆர்வமூட்டலுக்கான, கல்லுாரி களப்பயணத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.குமராட்சி வட்டாரத்தைச் சேர்ந்த 8 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, பிளஸ் 2 மாணவ,மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர், சிதம்பரம், மாவட்ட மருத்துவக் கல்லுாரிக்கு வருகை தந்தனர்.மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் சசிகலா வரவேற்றார். மருத்துவப் புல முதல்வர் திருப்பதி பங்கேற்று, மாணவர்கள் உயர்படிப்பிற்கு, எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார். டாக்டர் செந்தில்முருகன், குமராட்சி வட்டார வளமையும் மேற்பார்வையாளர் இளவரசன் நோக்கவுறையாற்றினர்.கல்லுாரியில் பயிலும், முன்னாள் பள்ளி மாணவர்கள், விஷ்ணுப்பிரியன், வினிதா, பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.களப்பயணத்தில் பங்கேற்ற மாணவர்கள், கல்லுாரியில் உள்ள மருத்துவம் சார்ந்த துறைகள், செவிலியர் கல்லுாரி சார்ந்த துறைகள் மற்றும் இயல் முறை மருத்துவம், மருத்துவமனை சார்ந்த துறைகளை பார்வையிட்டனர்.ஆசிரியர் பயிற்றுனர் பூங்குழலி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை