உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி வேன் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்

பள்ளி வேன் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்

திட்டக்குடி : ராமநத்தம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து, 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டி தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்கள் 30பேர், நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து, பள்ளி வேனில் வீடு திரும்பினர். இரவு 8:00 மணியளவில் கண்டமத்தான் சாலையில் சென்றபோது, சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதில் வேனில் இருந்த மாணவர்கள் ஹரிஹரன், ஸ்ரீமதி, கணபதி உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர். அனைவரும் ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ