உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றில் மாயமான சிறுவன் 2வது நாளாக தேடும் பணி

ஆற்றில் மாயமான சிறுவன் 2வது நாளாக தேடும் பணி

விருத்தாசலம்; வெள்ளாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி இரண்டாவது நாளாகியும் பயனில்லாததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.பெண்ணாடம் அடுத்த மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர் கடந்த 22ம் தேதி, தனது மகன் சந்திரசேகர், 10, (5ம் வகுப்பு) என்பவருடன், அவ்வழியே செல்லும் வெள்ளாற்றில் குளிக்க சென்றார்.அப்போது, திடீரென சந்திரசேகர் நீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை மீட்க முடியாமல் சரஸ்வதி கூச்சலிட்டும் பலனில்லை. தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இருப்பினும் நீரில் மூழ்கிய சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக தீயணைப்பு மீட்பு படையினர் 15 பேர், மாவட்ட காவல் மீட்பு படையினர் 10 பேர் மற்றும் கிராமத்தினர் 25 பேருடன் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால், இரவு 7:00 மணி வரை சிறுவன் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. நீரோட்டம் குறையாத காரணத்தால் சிறுவனை மீட்கும் பணி தொய்வடைந்துள்ளது. ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்க முடியாததால் மோசட்டை கிராமமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை