ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு
சிதம்பரம்; சிதம்பரம் ரயில் நிலையத்தில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழச்சி நடந்தது.சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமை தாங்கி, பெண்கள் மற்றும் கல்லுாரி பெண்கள் மத்தியில் பேசுகையில், ரயில் பயணத்தின் போது, பெண்களுக்கு எவ்வித தொந்தரவு ஏற்பட்டாலும், 9962500500 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண் 1512-ல் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்தார். தொடர்ந்து, பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்பு ஏற்படுத்தினார்.நிகழ்ச்சியில், சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் ராஜூ பிரசாத் மற்றும் ரயில்வே போலீசார் பங்கேற்றனர்.