உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்//

புவனகிரி: பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அம்பேத்கரும், இந்திய அரசியலமைப்பு சட்டமும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.புவனகிரி அருகே தனியார் விடுதியில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். ஆசியஜோதி வரவேற்றார்.மாவட்ட பொறுப்பாளர்கள் அமர்நாத், மணிகண்டன், மகாபோஸ், வித்யாராஜசேகர், ஜெயம் செந்தில்குமார், மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் தணிகைசெல்வன், திருமாறன் தென்சென்னை மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கில் விவாதித்து பேசினர்.சிதம்பரம் சட்டசபை தொகுதி தலைவர் முகேஷ்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை