வடக்குபாளையம் ஊராட்சியில் சிறப்பு முகாம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் இளஞ்சூரியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீராங்கன், செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அருள்ஜோசப் வரவேற்றார். கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் தங்க ஆனந்தன், கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார். நகர செயலாளர் செல்வக்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி முத்துராமலிங்கம், விளையாட்டு நலன் மேம்பாட்டு அணி அமைப்பாளர் சதீஷ்குமார், தொழிலாளர் அணி சேகர், ஒன்றிய அவைத்தலைவர் கண்ணப்பன், பொருளாளர் அருள்ஜோதி, ஜோதிமணி, குமரவேல், ரவிகாந்த் பங்கேற்றனர்.