உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கே.எஸ்.ஆர்., பள்ளியில் விளையாட்டு விழா

கே.எஸ்.ஆர்., பள்ளியில் விளையாட்டு விழா

விருத்தாசலம்; விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., ைஹடெக் சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் முனைவர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.நெய்வேலி என்.எல்.சி., விருந்தினர் மாளிகை நிர்வாக அலுவலர் ராஜன்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.மேலும், விளையாட்டு துறையின் முக்கியதுவம், அதன் பலன்கள் குறித்து மாணவர்களிடம் பேசினார்.பள்ளியின் இயக்குனர் ரஞ்சித், நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.தலைமை ஆசிரியர் பெட்ரிஷியா செபஸ்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி