உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி ஆவணம் மூலம் வீடு வாங்கிய மகளுடன் இலங்கை நபர் கைது

போலி ஆவணம் மூலம் வீடு வாங்கிய மகளுடன் இலங்கை நபர் கைது

வடலுார், : குறிஞ்சிப்பாடியில், போலி ஆவணங்கள் தயாரித்து வீடு வாங்கிய இலங்கை நபர், மகளுடன் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பை சேர்ந்தவர் கமலேந்திரன், 50; சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இருவரும் நண்பர்கள்.கடந்த 2022ம் ஆண்டு கருணாகரன் உதவியுடன், கமலேந்திரன், அவரது மகள் டினோஜா, 26; ஆகியோர், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்தனர்.அந்த ஆவணங்களை வைத்து, மகள் டினோஜா, கருணாகரன் மனைவி சுமதி ஆகியோர் பெயரில் குறிஞ்சிப்பாடி நந்தவனத் தெருவில் பெருமாள் என்பவரின் வீட்டை கமலேந்திரன், 35 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்.இதற்கிடையே, கமலேந்திரன் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தபோது, கியூ பிராஞ்ச் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் குடியிருந்த வீட்டை, போலி ஆவணங்கள் தயாரித்து வாங்கியிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து வி.ஏ.ஓ., சித்ரா அளித்த புகாரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து கமலேந்திரன், டினோஜா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த கருணாகரன், சுமதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்