உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில செயற்குழு கூட்டம்

மாநில செயற்குழு கூட்டம்

சிதம்பரம்; சிதம்பரத்தில், தமிழ்நாடு கார்காத்தார் சங்க கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சிவராஜன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராமநாதன், அமைப்பு செயலாளர் சண்முகம், தலைமை நிலைய செயலாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அனைத்து வேளாளர் சமுதாயத்தையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, வலியுறுத்தி சிதம்பரம் பகுதியில் மாநில மாநாடு நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர தலைவர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை