உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி; கடலுார் மாணவர்கள் அணி மூன்றாமிடம்

 மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி; கடலுார் மாணவர்கள் அணி மூன்றாமிடம்

கடலுார்: சேலத்தில் நடந்த மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில், கடலுார் மாணவர்கள் அணி மூன்றாமிடத்தை பிடித்து வெற்றி பெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூாரில் 16வது மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டி, சமீபத்தில் நடந்தது. மாணவர்களுக் கான குழு போட்டியில் கோவை, ஈரோடு, சேலம், வேலுார், கடலுார், தஞ்சாவூர், திருநெல்வேலி உட்பட 16 அணிகள் பங்கேற்றன. கடலுார் மாணவர்கள் அணி அரையிறுதி போட்டி வரை பங்கேற்று, மூன்றாமிடம் பிடித்து பரிசை வென்றனர். மூன்றாம் பரிசு பெற்ற கடலுார் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அப்பாதுரையை, தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் கவிதா செம்பண்ணன் வாழ்த்தினார். வெற்றி பெற்ற அணியினர், கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமாரிடம் வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ