உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் வெற்றி

லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் வெற்றி

கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் தலைமுறை ஈவன்ட் சார்பில் கட்டுரை, ஓவியம், கையெழுத்து போட்டி நடந்தது. இதில், இப்பள்ளியை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 5ம் வகுப்பு மாணவர் யுவனேஷ் முதலிடம் பிடித்தார். வகுப்பு வாரியாக 11 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா பாராட்டினர். ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை