உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்று பால இணைப்புச்சாலை பிரச்னை சிதம்பரத்தில் சப் கலெக்டர் பேச்சுவார்த்தை

வெள்ளாற்று பால இணைப்புச்சாலை பிரச்னை சிதம்பரத்தில் சப் கலெக்டர் பேச்சுவார்த்தை

சிதம்பரம்: பரங்கிபேட்டையில், வெள்ளாற்று பால இணைப்புச்சாலை அமைக்க கோரி மறியல் போராட்டம் அறிவித்தவர்களுடன், சப் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.பரங்கிப்பேட்டை பொன்னந்திட்டு கிரா மத்தை இணைக்கும் வகையில், வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம் பாலம் கட்டப்பட்டது. ஆனால், இப்பாலத் தில் இருந்து, கிள்ளை மற் றும் பரங்கிப்பேட்டை என, இருபுறமும் இணைப்பு சாலை பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.இது தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, கிள்ளை மார்க்கமாக இணைப்பு சாலை அமைக் கப்பட்டது. ஆனால், பரங்கிப்பேட்டை மார்க்கமாக இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை.இதை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், நாளை (15ம் தேதி) சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.அதையடுத்து, போராட்டம் அறிவித்தவர்களுடன் சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் ஏ.எஸ்.பி., ரகுபதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, பேரூராட்சி துணைத் தலைவர் முகமதுயூனூஸ், கற்பனைசெல்வம், ஒன்றிய செயலாளர் விஜய், பரங்கிப் பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 31ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி