உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுாரில் டீ விலை 14 ரூபாயாக உயர்வு

 கடலுாரில் டீ விலை 14 ரூபாயாக உயர்வு

கடலுார்: கடலுாரில் 'டீ' விலை அதிகபட்சமாக 14 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலுார் மாநகரில் 'டீ' விலை ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை, ஒரு டீயின் விலை 10 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் 'டீ' விலை 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம் பகுதி முழுவதும் 10 ரூபாய்க்கும், திருப்பாதிரிப்புலியூரில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் 12 ரூபாயாகவும், இன்னும் சில கடைகளில் 14 ரூபாயாகவும் டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனால், டீ பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை