உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசை வழிபாடு

விருத்தாசலம்: தை அமாவாசை முன்னிட்டு விருத்தாசலம் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் மணவாளநல்லுார் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர். சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு 7:00 மணியளவில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி ரோடு வேடப்பர் கோவில், எருமனுார் ரோடு ஜெகமுத்து மாரியம்மன், தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ