| ADDED : ஜன 02, 2024 05:56 AM
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே புத்தாண்டு கொண்டாடத்தின் போது, கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்த மருகன் மகன் தமிழ்செல்வன், 16; அருள் மகன் ஆர்யா, 16; இருவரும் நேற்று முன்தினம் இரவு தமது நண்பர் களுடன் புத்தாண்டு கொண் டாடினர்.அப்போது, எதிர்பாராத விதமாக தமிழ்செல்வன், ஆர்யா இருவரும் அப்பகுதியில் சிவக்குமார் நிலத்தில் இருந்த தரை கிணற்றில் விழுந்தனர்.கிணற்றில் விழுந்தஇரு வரும் சத்தம் போட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடிந்து, தமிழ்செல்வனை காப்பாற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அப்போது, ஆர்யாவும் கிணற்றில் விழுந்ததாக தமிழ்செல்வன் தெரிவித் தான். உடனடியாக பொது மக்கள் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறந்து கிடந்த ஆர்யா உடலை மீட்டனர்.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.