உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.சி.என்.பாளையம் பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையிலான சிறப்பு பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பஸ் நிறுத்தம் அருகில் உள்ள புளியந்தோப்பில் சி.என்.பாளையம் காலனியை சேர்ந்த வீரமுத்து மகன் அபிஷேக், 19, என்பவர் 10 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை