உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 3 இடங்களில் திருட்டு: வாலிபர் கைது

3 இடங்களில் திருட்டு: வாலிபர் கைது

கடலுார்: கடலுாரில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், புதுநகர் போலீசார் ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.விசாரணையில், கடலுார், மஞ்சக்குப்பம் முருகன், 40; என்பது தெரிந்தது. இவர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த ரமேஷ் ராணா என்பவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள இவரது ஹார்டுவேர்ஸ் கடையின் பூட்டை உடைத்து கடந்த 31ம் தேதி, 3 மின் மோட்டார்களை திருடியது தெரிந்தது.மேலும், செம்மண்டலம் முகமது அசாருதீனின் ஆட்டோ மொபைல்ஸ் கடையில் 5,000 ரூபாயும், மஞ்சக்குப்பம் சேகர், 48; என்பவரின் எலக்ட்ரிக்கல் கடையில் 10,000 ரூபாய் திருடியதும் தெரிந்தது. உடன், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து, 2 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை