உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு டிராபிக் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு டிராபிக் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கடலுார்: கடலுார் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், டிராபிக் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திருமாவளவன் முன்னிலை வகித்தனர். இதில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு வாரம் தலைப்பில் சாலை பாதுகாப்பு, சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின், புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் நசியான் கிரகவரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை