உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தில், வட்டார ஆத்மா திட்டத்தின் கீழ், சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுகன்யா தலைமை தாங்கி, துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மோதிலால் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் சாகுபடி தொழில் நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தார்.இதில், ஆத்மா திட்ட உதவி மேலாளர்கள் மதிவாணன், தேவேந்திரன், உதவி வேளாண் அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை