உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மறைந்த விஜயகாந்துக்கு புகழஞ்சலி கூட்டம்

மறைந்த விஜயகாந்துக்கு புகழஞ்சலி கூட்டம்

விருத்தாசலம் : தே.மு.திக., தலைவர் மற்றும் விருத்தாசலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகாந்த் மறைவையொட்டி, அனைத்து கட்சி சார்பில், அமைதி ஊர்வலம் மற்றும் புகழஞ்சலி கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது.வானொலி திடலில் துவங்கிய அமைதி ஊர்வலத்திற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார்.விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். ஊர்வலத்தைத் தொடர்ந்து நடந்த புகழஞ்சலி கூட்டத்தில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, அ.தி.மு.க., மாநில பேரவை துணைச் செயலாளர் அருளழகன், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், முன்னாள் நகர மன்ற தலைவர் முருகன், மங்கலம்பேட்டை முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கர், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார்,இந்திய கம்யூ., பாலமுருகன், இந்திய ஐக்கியகம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் மற்றும்அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை