உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பண்ருட்டியில் உதயநிதி பிறந்தநாள்

 பண்ருட்டியில் உதயநிதி பிறந்தநாள்

பண்ருட்டி: ப ண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா, 33 வார்டுகளில் ந டந்தது நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலர்கள் ஆனந்திசரவணன், தணிகைசெல்வம், மாவட்ட தொண்டரணி கதிர் காமன், அவைதலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நான்குமுனை சந்திப்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. பண்ருட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் பேனா, வழங்கினர். பஸ் நிலையம் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. போக்குவரத்து கழக பணி மனையில் தொ.மு.ச சார்பில் இனிப்புகள் வழங்கினர். நகர மாணவர் அணி சார்பில் திருவதிகையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு மற்றும் போர்வை, புடவை, வழங்கப்பட்டது. இதில் நகர துணை செயலாளர்கள் கவுரிஅன்பழகன், சீனிவாசன், சசிகுமார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணி சந்தர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர், ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி, ரமேஷ், சாந்தி செந்தில், சோழன், அருள், கிருஷ்ணராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை