உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி

கடலுார்: கடலுார் இம்பீரியல் சாலையில் பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி நடந்தது.கடலுார் இம்பீரியல் சாலையில் மோகினி பாலம் அருகில் பிரதான பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் துர்நாற்றம் வீசியது. இதனை சரி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு 35வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சரத் தினகரன் கோரிக்கை விடுத்தார்.அதன்பேரில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடையில் புதிய பைப் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை கவுன்சிலர் சரத் தினகரன் பார்வையிட்டார். இன்ஜினியர் குருசாமி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ