உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹயக்ரீவர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

ஹயக்ரீவர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' எனும் கல்வி துவக்க நிகழ்ச்சிநடந்தது. விஜயதசமி தினமான நேற்று, கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் எதிரில் மலை மீது அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில், குழந்தைகளுக்கு, 'வித்யாரம்பம்' எனும் கல்வி துவக்க நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, ஹயக்ரீவர் சன்னதியில் தரையில் நெல் மற்றும் அரிசியை கொட்டி வைத்து, அதில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் கை விரலை பிடித்து அ...ஆ... என்ற எழுத்துகளை எழுத செய்தனர். தேவநாதசுவாமி கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி