உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காடாம்புலியூர் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது விஜிலென்ஸ் போலீஸ் வழக்கு

காடாம்புலியூர் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது விஜிலென்ஸ் போலீஸ் வழக்கு

கடலுார்: பண்ருட்டி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்றதாக, சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி கடலுார் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் உள்ளிட்ட போலீசார், சோதனை செய்தனர். அப்போது பத்திரப் பதிவு செய்பவர்களிடம் லஞ்சமாக பெற்று கம்ப்யூட்டர் ரூம், ஆவண எழுத்தர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.இது குறித்து ஆய்வுக் குழு ஆய்வாளர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில், பொறுப்பு சார் பதிவாளர் வேல்விழி, 55; ஆவண எழுத்தர்கள் கதிர்காமன், கலைவாணி, 47; வைத்தியலிங்கம், 50; இடைத்தரகர் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஆகிய 5 பேர் மீது கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ