உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வேப்பூர்: ஊராட்சி செயலரை பணி இடமாற்றம் செய்ய கூடாது என கிராம மக்கள் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் அடுத்த சிறுநெசலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்தார். அப்போது, ஊராட்சியில் முறைகேடு செய்ததாக கூறி பணி இடை நீக்கம் செய்யப்பட்டு, கோவிலுார் கிராமத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். கதிர்வேல் மீண்டும் சிறுநெசலுார் கிராமத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிய, நல்லுார் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று பகல் 2:30 மணிக்கு, கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்லுார் பி.டி.ஓ., கொளஞ்சியை சந்தித்து, ஊராட்சி செயலர் கதிர்வேலை மீண்டும் சிறுநெசலுார் ஊராட்சிக்கு பணி இடமாற்றம் செய்ய கூடாது என மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை