உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புதிய அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

 புதிய அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் புதிய அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என கேள்வி எழுந்துள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி, 26 வது வார்டு, வைடிபாக்கத்தில் பழமையான கட்டடத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்படுகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நகராட்சி மூலம், ரூ.15 லட்சம் செலவில் புதியதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்ட பணி முடிந்து, 8 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால் இன்னமும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அலட்சியத்தால் அந்த கட்டடம் இன்னும் திறக்கபடாமல் உள்ளது. குழந்தைகள் நலன்கருதி, உடனடியாக புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி