உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் நேதாஜி சாலையில் வடிகால் வாய்க்கால்... அமைக்கப்படுமா?: மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிப்பு

கடலுார் நேதாஜி சாலையில் வடிகால் வாய்க்கால்... அமைக்கப்படுமா?: மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிப்பு

கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கும் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கடலுார், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து போஸ்ட் ஆபீஸ் ரவுண்டானா வரையில் நேதாஜி சாலையாகும். இந்த சாலை குறுகலாக இருப்பதாலும், வாகன போக்குவரத்து மிகுதியாலும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கடலுார் மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் எல்லாம் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுப்பாளையம் மெயின்ரோடு, பீச் ரோடு, பாரதி ரோடு, லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் ரோடு உள்ளிட்ட பல ரோடுகளில் சாலை வீணாகாமல் இருப்பதற்கும், மழைநீர் உடனடியாக வடியவும் இதுபோன்ற வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன. புதுச்சேரி-கடலுார் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஆல்பேட்டையில் இருந்து பச்சையாங்குப்பம் வரை சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கி.மீ., துாரத்திற்கும் குறைவாக உள்ள மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் மட்டும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இந்த சாலை மற்ற சாலைகளோடு ஒப்பிடும்போது சற்று குறுகலாக இருப்பதால் வடிகால் வாய்க்காலை உயர்த்தி கட்டாமல் தரையோடு தரையாக அமைக்கப்படும் என கூறப்பட்டது. இந்த பணியை மாநகராட்சி மேற்கொள்வதாக தேசிய நெடுஞ்சாலை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் யாருமே பணி செய்ய முன்வரவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட சிறிய கால்வாய் உடைந்து, பல இடங்களில் காணாமல் போய் விட்டது. சிலர் வாய்க்காலை அடைத்து ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால், கனமழை பெய்தா ல் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. குறிப்பாக, ஸ்டேட் பாங்க், பிள்ளையார்கோவில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக சாலை மிகவும் பள்ளமாக இருப்பதா ல் தண்ணீர் ஓட வழியில்லாமல் தேங்கி நிற்கும். எனவே நேதாஜி சாலையி ல் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், 'நேதாஜி சாலையில் சாலை பள்ளமாக உள்ளது. அதனால் மழைநீர் ஓட வழியில்லாமல் தேங்கி நிற்கும் சூழல் நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் உடைந்து வீணாகிவிட்டது. தற்போது கனமழை பெய்தால் சாலையிலேயே 3 அடி ஆழத்திற்கு தண்ணீர் சாதாரணமாக நிற்கிறது. எனவே புதிய கால்வாய் கட்டினால்தான் இப்பிரச்னையை தீர்க்க முடியும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை