உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கந்தலான சாலை சீரமைக்கப்படுமா?

 கந்தலான சாலை சீரமைக்கப்படுமா?

புதுச்சத்திரம்: அத்தியாநல்லுார் சாலையை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுார் பகுதிக்கு செல்லும் சாலை வழியாக சேந்திரக்கிள்ளை, பூவாலை, வேளங்கிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் அத்தியாநல்லுார் பகுதியை சேர்ந்தவர்கள், தங்கள் நிலங்களுக்கு வேளாண் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சாலை பழுதடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !