தர்மபுரி: தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், போதை பழக்கத்திற்கு எதிரான, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் நேற்று நடந்தது.தமிழக முதல்வர் காணொலி காட்சியில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, கல்லுாரி மாணவ, மாண-வியர், அலுவலர்கள் ஏற்றனர். செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சியின் மூலம், சி.இ.ஓ., ஜோதிசந்திரா முன்னிலையில், மாவட்ட கல்வி அலுவ-லர்கள், பள்ளி முதல்வர் உட்பட, 1,350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி-மொழி ஏற்றனர்.தர்மபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிக-ளிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவ, மாணவியர் நேற்று ஏற்றனர். இதில், எஸ்.பி., மகேஸ்வரன், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களான ஜி.கே.மணி, வெங்கடேஷ்-வரன், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கல்லுாரி முதல்வர் கண்ணன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அர-சுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், முதல்வர் ரவி தலைமையில், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி-மொழி ஏற்றனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி எஸ்.ஐ.,க்கள் ரவிச்-சந்திரன், ராஜேந்திரன், பேராசிரியர்கள் ரமேஷ், அருண் நேரு உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.