உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வன்கொடுமையால் பாதித்து பலிவாரிசுதாரர் 7 பேருக்கு அரசு பணி

வன்கொடுமையால் பாதித்து பலிவாரிசுதாரர் 7 பேருக்கு அரசு பணி

வன்கொடுமையால் பாதித்து பலிவாரிசுதாரர் 7 பேருக்கு அரசு பணிஈரோடு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஈரோடு மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு முதல் காலாண்டு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, ஏழு பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு துறைகளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஒன்பது பேரின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் சமுதாய கூடம் அமைத்தல், சிறப்பு நுாலகம் அமைத்தல், புதிய குடிநீர் தொட்டி அமைத்தல், தகுதியுடைய பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, சிறப்பு மருத்துவ சிகிச்சை, நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து விரைவான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.எஸ்.பி., ஜவகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி