உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

அரூர்: அரூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போக்சோ விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பழனி-துரை வரவேற்றார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷ் பேசுகையில், மாணவர்கள் போதை பொருள் இல்லா சமூகத்தை உருவாக்க வேண்டும். போதை பொருள் பழக்கம் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும். பெண்களை கேலி செய்யக்கூடாது. சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் எஸ்.ஐ., சக்-திவேல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை