உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 220 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பை

220 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பை

  • கிருஷ்ணகிரி, ஆக. 2-காவேரிப்பட்டணம் அடுத்த நரிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனத்தின் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக புத்தகப் பை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவன, சேலம் மண்டல மேலாளர் முத்துசாமி பேசினார். நிகழ்ச்சியில், 220 மாணவ, மாணவியருக்கு புத்தகப்பை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.இதில், சப்தகிரி அக்ரோ சர்வீஸ் பார்த்தீபன், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ